http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09


மாணவர்களின் பிரச்சினைகளும் தீர்வுகள்

மதிப்பிற்குரிய பெற்றோர்களுக்கு!

     மாணவர்களுக்கு இயல்பாக வரும் பிரச்சினைகள், அவர்களாகவே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சினைகள், இல்லாதவற்றை தாங்களாகவே கற்பனை செய்து கொள்ளும் பிரச்சினைகள் என்று பலவகைப்படுத்தலாம்.

     மாணவர்களின் உடல் மனம் இவற்றின் மாற்றங்களால் வரும் பிரச்சினைகள் மிக அதிகம். இதற்கு ஆசிரியர்களும் பெற்றோரும் அம்மாணவர்களிடம் பேசி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். வயதினால் ஏற்படும் மாற்றங்களை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த மாற்றத்தினால் படிப்பு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

     காரணமில்லாமல் அவர்களாகவே சிலவற்றை கற்பனை செய்து பிரச்சினைக்குள்ளாகிறார்கள். இதனை மாணவர்களின் பெற்றோர்கள் கவனித்துத் தீர்க்க வேண்டும்.

     சில மாணவர்களிடத்தில் அதிகமான பய உணர்வு இருக்கும். சில மாணவர்களிடத்து அலட்சியமும், அசட்டுத் தைரியமும் இருக்கும். இப்படிப்பட்ட மாணவர்களைக் கண்டறிந்து பயப்படாத மாணவர்களிடம் பேசி படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கொஞ்சம் பயமுறுத்திப் படிக்க வைக்க வேண்டும். அதிகம் பயப்படுபவர்களிடம் இதெல்லாம் சாதாரண படிப்பு என்று சொல்லி தைரியப்படுத்த வேண்டும்.

     பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை, வளர்ந்து விட்டார்கள், தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டுவிடுவதும் தவறு. அவர்கள் கூடவே எப்போதும் இருப்பதும் தவறு. மாணவர்களை எப்போதும் கவனித்து வரவேண்டும். அவர்களின் முகமாற்றத்தைக் கொண்டு பிரச்சினைகள் என்ன என்பதைக் கண்டு அதனை மிகச் சாதாரணமாகத் தீர்க்க வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமே தவிர அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது.

     மாணவர்களுக்கு இரண்டு விஷயங்கள் சுத்தமாகப் பிடிக்காது. ஒன்று எப்போதும் அறிவுரை கூறுவது. மற்றொன்று பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவது. இதனைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றிப் பெற்றவர்களைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர நீ அப்படி இல்லையே என்று குறை கூறக்கூடாது.

     பதின்மூன்று வயதில் வீர சிவாஜி கோட்டையைப் பிடித்தார். நீயும் அப்படி வரவேண்டும் என்று சொல்ல வேண்டும். அதனை விட்டுவிட்டு உனக்கு பதினாறு வயதாகிறது படிக்கவே திண்டாடுகிறாய். பதின்மூன்று வயதிலேயே வீர சிவாஜி கோட்டையைப் பிடித்தார் என்று பிள்ளையிடம் சொன்னால் அப்பாவுக்கு பதின்மூன்று வயது வராமலேயே பெரியாளாய் ஆகிவிட்டார் போலும், இவர் எந்தக் கோட்டையைப் பிடித்தார்? இவர் நம்மை சொல்வதற்கு என்று எதிர்மறையாகத்தான் எண்ணுவார்கள்.

     குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள் என்றால் சிறு குடும்பப் பொறுப்புகளைக் கொடுங்கள். அவர்களை தனித்து விட்டுவிடாதீர்கள். அவர்களிடம் நெருங்கி தோழமையுடன் பழகுங்கள். அம்மா, அப்பா தமது பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசம் தான் அவர்களை தவறு செய்யாமல் தடுக்கும். தவறு செய்துவிட்டால் மெதுவாக எடுத்து சொல்லுங்கள். அறிவு சார்ந்த விஷயங்களில் எல்லோருக்கும் எப்போதும் ஈடுபாடு இருக்கும். அந்த விஷயங்களில் பிள்ளைகளை ஈடுபடுத்துங்கள். 16 வயதிலிருந்து 24 வயது வரை தனித்து இருக்கவோ, சும்மா இருக்கவோ விடக்கூடாது. அவர்களிடம் அதிகம் பேசுங்கள்.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/articles/article1.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.