http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09


மாணவர்களின் பிரச்சினைகளும் தீர்வுகள்

... தொடர்ச்சி ...

     பையன் எதிர்த்து பேசுகிறான் என்று சில பெற்றோர்கள் சொல்வார்கள். சிறுபையன் என்ற நிலையிலிருந்து முழுமனிதன் என்ற நிலைக்கு மாறுகிறான். அப்போது அதிகம் மதிப்பினை பிறரிடமிருந்து எதிர்பார்க்கிறான். ஆனால் அவனால் குழந்தைத் தன்மையையும் விடமுடியாமல் திண்டாடுகிறான். மற்றவர்களை மதிக்காமல் இருப்பது தனக்கு மதிப்புத் தரும் என்று நினைக்கிறான். முதலில் அம்மாவிடம் தான் அதிகம் எதிர்த்துப் பேசுவான். அதுவரை கடைபிடித்து வந்த கட்டுப்பாடுகளை மீறுவான். இது பெற்றோருக்கு அதிக கோபத்தையும் வீண் பயத்தையும் ஏற்படுத்தும்.

     இதுவரை நாம் சொன்னதைக் கேட்டு வந்த பிள்ளை, பிற்காலத்தில் நம்மை மதிக்கமாட்டானோ, நமது கடைசிக் காலம் மிகவும் சிரமமாக இருக்குமோ என்றெல்லாம் பயப்படுவார்கள். இதுவே பிரச்சினைகளை அதிகப்படுத்தும். வீட்டில் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வருவதும், பெரியவர்கள் தமக்கு மூத்தவர்களிடம் பணிந்து நடப்பதன் மூலமும் தெய்வ வழிபாடும் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவரும்.

     மூன்றாம் வகுப்பு வரை பிள்ளைகளையும் அவர்கள் படிக்கும் பள்ளிகளையும் சுற்றிச் சுற்றி வரும் பெற்றோர் இடையில் காணாமல் போய் பின்னர் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு வரும்போது தான் பிள்ளைகளிடத்தும் பள்ளிகளிடத்தும் வருகிறார்கள். நடுவில் அவனை அதிகம் கவனிப்பதில்லை. ஒரு பிள்ளை வைத்திருப்பவர்கள் எப்போதும் அதன் கூடவே இருந்து பிள்ளைக்கென தனித்தன்மை இல்லாமல் வளர்க்கிறார்கள்.

     இவை இரண்டுமே தவறு. பிள்ளைகள் பள்ளிவிட்டு வந்தப்பிறகு அன்று பள்ளியில் நடந்தவை பற்றி கேட்டு அறியுங்கள். அன்று நடத்தப்பட்ட பாடங்கள் என்ன என்பதைக் கேளுங்கள். பிள்ளையிடம் பாடத்துடன் சக மாணவர்களின் உடை, அவர்கள் பேசியது, விளையாடியது, முதலிய சகல விஷயங்களையும் பொறுமையுடனும், ஆர்வத்துடனும் கலந்துரையாடுங்கள். பள்ளிக்குச் செல்லும் போது உங்கள் பிள்ளையின் வகுப்புக்கு வருகிற ஆசிரியர்களைத் தவறாது பாருங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது பள்ளிக்குச் செல்லுங்கள்.

     நீங்கள் இவ்வாறு செய்யும்போது ஆசிரியர்களின் கவனம் உங்கள் பிள்ளையிடம் இருக்கும். நீங்கள் வரும்போது உங்கள் பிள்ளையைப் பற்றி சொல்வார்கள். எது செய்தாலும் வீட்டிற்குத் தெரிந்து போய்விடும் என்ற நிலை இருந்தால் பிள்ளைகள் தவறு செய்யமாட்டார்கள்.

     பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பிற்கு வந்துவிட்டால் அதிகம் கவனிக்க வேண்டும். ஆனால் அதிகமாக அவர்களுக்கு நெருக்குதல் தரக் கூடாது. வீட்டில் அவள் குழந்தை மாதிரியான செயல்கள் செய்வதிலிருந்து என் பிள்ளை இன்னும் குழந்தைதான் என்று எண்ணி விடாதீர்கள்.

     பெண்ணின் வளர்ச்சி பல பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. இன்னும் குழந்தையாகவே இருக்கிறாள் என்பார்கள். ஆனால் கவனம் தேவை. அவளின் நடவடிக்கைகளை அதிகம் கவனிக்க வேண்டும். அவர்களுக்குப் புரியும் வண்ணம் உடலியல் மாற்றங்களையும், அதன் காரணங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். மனக்கட்டுப்பாடு பற்றியும் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். நாட்டு நடப்புகளையும் முன்னேற்றத்தின் அவசியத்தையும் எடுத்துரைக்க வேண்டும்.

     பிள்ளைகள் தனி அறையில் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு படிக்கிறேன் என்றால் அதனை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்காதீர்கள். உங்கள் கண் பார்வையில் தான் அவர்கள் இருக்க வேண்டும். படிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/articles/article1a.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.