http://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.comhttp://www.balavasanthapathippagam.com http://www.balavasanthapathippagam.com



அன்புடையீர்

     பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம்.

அன்புடன்
பால சங்கரன்.

Visitors from
20-02-09


மாணவர்களின் பிரச்சினைகளும் தீர்வுகள்

... தொடர்ச்சி ...

     மாலை வரை பள்ளியில் இருந்திருப்பார்கள். வீட்டுக்கு வந்தவுடன் கூடப் படிப்பவனிடம் புத்தகம் வாங்கி விருகிறேன் என்றால் நம்பாதீர்கள். இனி இவ்வாறு செய்யாதே என்று சொல்லி குறிப்பிட்ட நேரத்தைக் கொடுத்து அதற்குள் வந்து விடு என்று அனுப்புங்கள். இவ்வாறு செய்வதால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

     பள்ளிநேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகப் பள்ளியில் இருப்பது போல் பிள்ளைகளை அனுப்புங்கள். மிக முன்னதாக அனுப்புவது பல பிரச்சினைகளை உருவாக்கும். அதே நேரத்தில் காலதாமதமாகவும் அனுப்பாதீர்கள். தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். பள்ளி நேரம் முடிந்தவுடன் விரைவில் வீட்டுக்கு வருகிறார்களா என்பதைக் கவனியுங்கள். வீட்டிற்கு வந்தவுடன் ஏதேனும் சிற்றுண்டி கொடுத்துவிட்டு அருகில் உள்ளவர்களோடு விளையாட அனுப்புங்கள். ஆனால் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு அந்த நேரத்திற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள்.

     தேர்வு சமயங்களில் விடியற்காலையில் உங்கள் பிள்ளை எழுந்து படித்தால் நீங்களும் அந்தச் சமயத்தில் அவர்களுடன் எழுந்துவிடுங்கள். அவன் தான் படிக்க வேண்டும் நான் எழுந்து என்ன செய்யப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். அவன் மட்டும் எழுந்து மற்றவர்கள் தூங்கினால் அவனால் கவனத்துடன் படிக்க முடியாது. அவன் படிக்கும் போது, நீ அந்த அறையில் போய்ப் படி, என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு நீங்கள் தொலைக்காட்சி பார்க்காதீர்கள். அது மிகவும் தவறு. நீங்கள் காட்டும் அக்கறை தான் அவனை முன்னேற்றும்.

     வீட்டுக்கு மூத்த குழந்தையாக இருந்து அவன் முதன் முறையாக அரசு தேர்வுக்குச் சென்றால், குடும்பமே தேர்வுக்குச் செல்வதுபோல் அக்கறையாக செயல்படுவார்கள். இரண்டாவது குழந்தைக்கு அந்த அக்கறையைக் காட்டமாட்டார்கள். இது மிகவும் தவறு. அரசு தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் வீட்டில் தேர்வு எழுதியபின் மகனை அல்லது மகளள என்ன செய்யச் சொல்லலாம், அடுத்தது என்ன செய்யலாம் என்று வருபவர்களையும் போகிறவர்களையும் வைத்துக் கொண்டு சிலர் பட்டிமன்றம் நடத்துவார்கள்.

     ஒரு சிலர் அதனையும் மீறி பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் பார்த்துவிட்டு வருவார்கள். இவ்வாறு செய்வது அடுத்ததை நினைத்துக் கொண்டு தற்போது உள்ளதை விட்டுவிடுவதைப் போன்றதாகும். தேர்வுக்கு படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும் என்பதை மட்டும் இப்போதைய குறிக்கோளாக கொள்ளுங்கள். தேர்வு முடிந்தவுடன் அடுத்தது என்ன செய்யலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

     தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களைப் பெரும்பாலும் வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் மிகுந்த கவனம் வேண்டும். நன்றாக சாப்பிடுகிறார்களா, தூங்குகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

     இவற்றையெல்லாம் செய்தால் உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் வாங்கி உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவான்.




இணைய பக்க முகவரி: http://www.balavasanthapathippagam.com/articles/article1b.html

பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க             முகப்பு பக்கமாக்க

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.