சென்னை புத்தக கண்காட்சி 2009-2010 ![]() எங்கள் அரங்கு எண் 443-க்கு வருகை தாருங்கள்! டிசம்பர் 30 முதல் ஜனவர் 10 வரை |

|
அன்புடையீர் பால வசந்த பதிப்பகம் இணைய தளம் 16-11-2009ல் முதலாம் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. எமது முயற்சிக்கு பேராதரவை அளித்த அனைவரையும் அன்புடன் வணங்குகிறோம். அன்புடன் பால சங்கரன். |
Visitors from 20-02-09 |
  மருதம் பட்டையை நெய்யில் வறுத்து பொடி செய்து அப்பொடிக்கு சம அளவு மஞ்சள் கரிசலாங்கண்ணி தூள் சேர்த்து காலை மற்றும் இரவு 1/2 கிராம் 100 மில்லி தேனில் சாப்பிட கல்லீரல் அழற்சி மற்றும் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி தீரும்.  பிரண்டையை துகையல் செய்து சாப்பிட பசியைத் தூண்டும். குடல் வாய்வும் நீங்கும்.  எலுமிச்சை மற்றும் நார்த்தை இலைகளை மோரில் உறப் போட்டு அம்மோரை பருகிவர குமட்டல் நீங்கும்.  தான்றி காய் தோலை, வறுத்து பொடித்து தேனுடனோ, சக்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட இரத்த மூலம் நிற்கும்.  மாசிக்காயை சிறிது நெய்விட்டு வறுத்து பவுடராக்கி புளியங்கொட்டை அளவு தேனில் காலை இரவு சாப்பிட இரத்தம் போதல் தீரும்.  வெந்தயத்தை ஊற வைத்து, வெந்தயத்தை மென்று தின்று, ஊறிய வெந்தய நீரைக் குடிக்க ஆசன கடுப்பு நீங்கும்.  மாம் பருப்பை நன்கு காயவைத்து பொடி செய்து மேற்படி பொடியை, நெய் அல்லது தேனில் குழைத்து சாப்பிட சீத பேதி குணமாகும்.  பூவரசம் கொழுந்தும் 5 அல்லது 6 மிளகும் சேர்த்து நன்கு அரைத்து மோரில் கலக்கி காலை, மதியம், இரவு தினமும் 3 வேளை சாப்பிட பூரண குணமாகும். மிளகும், பூவரசம் கொழுந்தும் அரைத்த விழுது எலுமிச்சை அளவு இருக்கவ் ஏண்டும். உணவில், உப்பு, புளி, நீக்க வேண்டும். கஞ்சி, பால் சாதம், இளநீர், கொழுப்பு இல்லாத பால் ஆகிய உணவே சிறந்தது. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2008 பாலவசந்தபதிப்பகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |